பெட்டிக்கடையில் மது விற்பனை! பொதுமக்கள் மனது வேதனை!

liquour sales in petty shop - 2026

மதுரை விக்கிரமங்கலத்தில் காவல் நிலையம் அருகே பெட்டிக்கடையில் கள்ளத்தனமாக மது  விற்பனையால் பொதுமக்கள் வேதனை

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் பகுதியில் காவல் நிலையம் அருகில் பெட்டிக்கடையில் கள்ளத்தனமாக  மது விற்கும் அவலம் அரங்கேறி வருகிறது. மது விற்பனை காவல் துறையினருக்கு தெரிந்தே, நடைபெறுகிறதா அல்லது  டாஸ்மாக் பணியாளர்கள் பெட்டிக்கடையில் வைத்து மதுபானங்களை கள்ளத்தனமாக விற்கிறார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 மதுரை மாவட்டம்,  விக்கிரமங்கலம் கீழப்பட்டி ரோட்டில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் விக்கிரமங்கலம் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த காவல் நிலையத்திற்கு எதிர்ப்புறம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகிலேயே பெட்டிக்கடையில் வைத்து கள்ளத்தனமாக மது விற்பனை ஜருராக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 மேலும்,  இதன் அருகிலேயே விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். விக்கிரமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் பேருந்து நிலையத்தில் இறங்கி பள்ளிக்கு செல்லும் வழியிலேயே இந்த பெட்டிக்கடையும் உள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர் 

பகல் 12 மணிக்கு   டாஸ்மாக் திறக்கும் நிலையில், அதிகாலை முதல் பெட்டிக்கடையில் வைத்து கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவது இங்குள்ள காவல் துறையினருக்கு தெரிந்தே விற்கப்படுகிறதா, அல்லது அருகில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு டாஸ்மாக்கில் பணிபுரியும் பணியாளர்கள் மதுபானங்களை மொத்தமாக பெட்டிக் கடையில் வைத்து விற்பனை செய்கிறார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 மாவட்ட நிர்வாகம், விக்கிரமங்கலம் பகுதியில் ஆய்வு செய்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  இதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories