
செங்கோட்டை தென்காசி ராஜபாளையம் வழி செல்லும் சென்னை-கொல்லம் விரைவு வண்டி(16101/16102) பெட்டிகள் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த ரயிலில் 10 ஸலீப்பர் பெட்டிகள் 9-ஆக குறைக்கப்பட்டு, அதற்கு ஈடாக ஒரு முன்பதிவில்லா பொதுப் பெட்டி இணைக்கப்படும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. இந்த மாற்றம் 01-ஜூலை-25 முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை – தஞ்சாவூர், கொல்லம் உட்பட நான்கு விரைவு ரயில்களில், கூடுதலாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.
மேலும் சென்னை எழும்பூர் – தஞ்சாவூர் உழவன் விரைவு ரயிலில், இரு மார்க்கத்திலும், கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, எழும்பூர் – கொல்லம் விரைவு ரயிலில், இரு மாக்கத்திலும், கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, ஜூலை, 1 முதல் இணைக்கப்படும்
நாகர்கோவில் – தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா விரைவு ரயிலில், இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, ஜூலை 5 முதல்; எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி விரைவு ரயிலில், இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, ஜூலை, 2 முதல் இணைத்து இயக்கப்படும்.
மேலும் மதுரை குருவாயூர்-மதுரை விரைவு வண்டி(16327/28) முன்பதிவில்லா பெட்டிகளில் ஏற்கனவே இருந்த வழக்கமான முன்பதிவில்லா பெட்டிகளுக்கு பதிலாக, இன்டர்சிட்டி வகை வண்டிகளில் பயன்படுத்தப்படும் முன்பதிவில்லா சேர் கார் பொதுப் பெட்டிகள் இரண்டு இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் மொத்த பெட்டிகள்/முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையில் மாற்றமில்லாமல் 14பெட்டிகளுடன் இந்த ரயில் இயங்கி வருகிறது.
மேலும் கோடை விடுமுறை பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க திண்டுக்கல் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் .
திண்டுக்கல் – நாகர்கோவில் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் நாளை திங்கட்கிழமை முதல் 31ம் தேதி வரை புதன், வியாழன் தவிர்த்து வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது .





