கடையம்… சாலையோரம் குப்பையை எரிக்காதீங்க..!

நெல்லை புகார் பெட்டி
kadayam
kadayam

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்கடையம் பஞ்சாயத்தில் குப்பை கழிவுகளை தென்காசி செல்லும் சாலையில் உள்ள செட்டி மடம் பகுதியில் குவித்து வைத்து மக்கும் குப்பை மக்கா குப்பை மற்றும் குப்பை பிரிக்கும் கூடங்கள் அமைத்துள்ளனர். ஆனால் அதைப் பயன்படுத்தாமல் குப்பைகளை பிரிக்காமல் பிளாஸ்டிக் கழிவுகளோடு சேர்த்து எரித்து வருகின்றனர்.

இதனால் கருப்பு புகை மண்டலம் எழுந்து சுற்றுப்புற பகுதிகளில் சுவாசிக்க முடியாத வண்ணம் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது இந்த குப்பை கிடங்கை சுற்றியுள்ள கல்யாணிபுரம் எழில் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

மேலும் தென்காசி சாலையில் வாகனஓட்டிகளும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர் மக்களை காக்க வேண்டிய உள்ளாட்சி நிர்வாகமே இவ்வாறு விதிமுறைகளை மீறி குப்பைகளை எரித்து வருகிறது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.