
சீன ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இன்று (ஜூலை 7) வைத்தீஸ்வரன்கோயிலில்… பிரசார இயக்கம் நடத்தப் பட்டது.

பாரதத்தின் மீது பொருளாதார ரீதியில் மறைமுக யுத்தம் நடத்தும் சீனாவின் சதித் திட்டத்தை முறியடிக்க சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்து மக்கள் கட்சி தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோயில் கடைவீதியில் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி இந்து மக்கள் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன், மாவட்ட செயலாளர் திலகராஜா, நிர்வாகிகள் தனசேகரன், அருட்செல்வன், மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



