கொரோனா: தென்காசியில் அதிகரிக்கும் தொற்று! இன்று ஒருவர் உயிரிழப்பு!

corono

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 506 பேர் கண்டறியப்பட்டதில், 324 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 4 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இந்நிலையில், ஆலங்குளத்தைச் சேர்ந்த தங்கம் (75) என்பவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதனால் தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

ஆஞ்சியோகிராம் செய்வதற்காக திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. இதனால், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி தங்கம் உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தினரும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் தன்னார்வ மீட்புக் குழுவினர் தங்கம் உடலை பெற்றுக்கொண்டு உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி ஆலங்குளத்தில் அடக்கம் செய்தனர்.

இந்நிலையில், இன்று மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் சென்னையில் இருந்தும், ஒருவர் மகாராஷ்டிராவில் இருந்தும், ஒருவர் குஜராத்தில் இருந்தும், ஒருவர் கர்நாடகாவில் இருந்தும், ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் வந்தவர்கள்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தவர்களை பரிசோதனை செய்ததில் 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆலங்குளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், ஓடைமரிச்சான் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட கொரோனா தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் ஏற்கெனவே பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்.

இவர்கள் தென்காசி, ஆலங்குளம், இலஞ்சி, சீவநல்லூர், விஸ்வநாதபுரம், ஊத்துமலை, புளியங்குடி, சுரண்டை, கரிவலம்வந்தநல்லூர், சங்கரன்கோவில், சேர்ந்தமரம், சிவகிரி, கீழப்பாவூர், வடகரை, சிவலார்குளம் பகுதிகளைச் சேர்நதவர்கள். தென்காசியில் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories