
திருக்கோவில்கள் இணையதள இணைப்பில் இந்து சமய அறநிலையத்துறை லட்சக்கணக்கில் ஊழலா ?
திமுக அரசு பதவியேற்ற பின்பு தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான ஆலயங்களை இணையதளம் மூலமாக அனைத்து தகவல்களையும் பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.சேகர்பாபு அவர்கள் அறிவித்தார்
இன்னும் ஒரு சில நாட்களில் அந்த இணையதள வழி தகவல் சேவை துவங்கப்பட உள்ளதாக தெரிகிறது
ஆனால் தமிழகத்தில் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு திருக்கோவில்களில் ஏற்கனவே இணையவழிச் சேவைகள் உள்ளன
அந்த திருக்கோவில் தொடர்பான அனைத்து தரவுகளும் இணையதளம் வாயிலாக அறநிலையத் துறை அதிகாரிகளும் பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது.
இதற்காக அண்ணா சிலிக்கான் என்கின்ற தனியார் நிறுவனம் சேவைக் கட்டணமாக வருடம் ரூபாய் 18ஆயிரம் வசூலித்து வருகிறது
ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோவில் களையும் இணையதளம் வாயிலாக இணைக்கலாம் என்ற பெயரில்
நெல்லையப்பர் திருக்கோவில் சார்பில் மட்டும் ஐந்து லட்சம் ரூபாய் இந்து சமய அறநிலையத் துறைக்கு கப்பம் கட்டப்பட்டுள்ளது
வெறும் 18 ஆயிரம் ரூபாயில் வருட பராமரிப்பு செய்து வந்த நெல்லையப்பர் கோவில் நிர்வாகம் தற்போது 5 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய அவசியம் என்ன ?
இந்த அண்ணா சிலிக்கான் நிறுவனம் பழனி ,திருச்செந்தூர் போன்ற கோவில்களிலும் ஏற்கனவே குறைந்த சேவை சேவை கட்டணத்தில் இணையதள வசதிகள் செய்து வருகிறது. அந்தக் கோவில்களுக்கும் தற்போது இதே நிலைதான்
இணையதள இணைப்பு என்ற பெயரில் ஒவ்வொரு கோவில்களில் இருந்தும் பல லட்சம் ரூபாய் வசூலித்து கோடிக்கணக்கில் ஊழல் செய்ய முயற்சி நடைபெறுகிறதா ?என்கின்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது
இணையதளத்திற்காக 18 ஆயிரம் ரூபாய் செலவு செய்து வந்த கோயில்களில் தற்போது 5 லட்சம் ரூபாய் இந்து சமய அறநிலையத்துறை வசூல் செய்ய வேண்டிய காரணம் என்ன ?
அறநிலையத்துறையிலும் விஞ்ஞான ஊழல் செய்ய பார்க்கிறதா திமுக அரசு ?
தமிழக முதல்வர் இதில் நேரடியாக தலையிட்டு ஊழலை தடுக்க வேண்டும் .
சிவன் சொத்து குலநாசம்
( கோவில் பணத்தை காக்க அனைத்து மக்களிடமும் இந்த செய்தியை கொண்டு செல்வோம் )
- கா.குற்றாலநாதன்,
மாநில செயலாளர், இந்து முன்னணி