
நெல்லை, நவ.14: நெல்லையில் தேவேந்திர சேனா சார்பில் முதலாம் ராஜராஜ சோழனின் 1036வது சதய விழா & கருத்தரங்கம் நடைபெற்றது.
விழாவுக்கு தேவேந்திர சேனா துணைத் தலைவர், முனைவர்.அ. குணசேகர் தலைமை வகித்து ராஜராஜ சோழன் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் சிறப்பு அழைப்பாளர்களாக முனைவர் பாண்டியன், எழுத்தாளர் தாமஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தாமஸ் எழுதிய “மலர்க தாமரை” என்ற நூலை முனைவர் அ. குணசேகர் வெளியிட்டார். மேலும் “தமிழக சமூக அரசியல் வரலாறு” என்ற நூலை முனைவர் பாண்டியன் வெளியிட்டார்.
விழாவில் முனைவர் பாண்டியன் , எழுத்தாளர் தாமஸ் பழந்தமிழர் பெருமைகள் மற்றும் இந்திர குலத்ததின் ஆன்மிகத் தொடர்புகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தேவேந்திர சேனா அமைப்பின் நிர்வாகிகள் அ.கா.ஸ்டாலின், பா. அருமை துரை , மா. ரபீந்திர சைலபதி , சு.மாரி துரைசாமி , என்.பாஸ்கர், சூரிய பிரகாஷ் குடும்பர், சுபாஷ் கண்ணன், ஸ்ரீதர், முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.