பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி… குற்றாலம் கல்லூரியில் பேராசிரியர்கள் முழக்கப் போராட்டம்!

Published:

courtallam parasakthi college 1 - 2026

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி முன்பு பேராசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம்!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி முன்பு வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கடந்த ஆண்டு எதிர்க்கட்சியாக இருந்த திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதேபோல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்திய மாநில கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என உறுதி அளித்திருந்தார்.

courtallam parasakthi college 2 - 2026

இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு தமிழக நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வாய்ப்பில்லை என தெரிவித்திருந்தார். இதனால் அவருடைய பதிலைக் கேட்ட அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

இந்த நிலையில் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி முன்பு வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் சுமார் 40 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த கோரி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related articles

Recent articles

spot_img