images 26 - 2026

திருச்சியில் மின்சாரம் தாக்கி இருவர் பலி..

சற்றுமுன்

திருச்சியில் மழையில் கீழே விழுந்து கிடந்த  விளம்பர பேனரை இன்று மீண்டும் அதே இடத்தில் வைக்கும் பணியில்  3 பேர் இன்று  ஈடுபட்டதில் இருவர் மின்சாரம் பாய்ந்து பலியாகினர்.

திருச்சி நம்பர் 1 டோல்கேட் மேனகா நகர் பகுதியில் வைரம் அப்பார்ட்மெண்ட்ஸ் உள்ளது. அப்பார்ட்மெண்ட் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரை ஒட்டி பிரம்மாண்ட விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. நேற்று  இரவு பெய்த மழை காரணமாக பேனர் சரிந்து கீழே விழுந்துள்ளது. விழுந்து கிடந்த அந்த விளம்பர பேனரை, மீண்டும் அதே இடத்தில் வைக்கும் பணியில் 3 பேர் இன்று  ஈடுபட்டனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த டிரான்ஸ்பார்மர் மின் கம்பியில் பேனர் உரசியதில் மின்சாரம் தாக்கிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் மின்சாரம் தாக்கி லால்குடியை சேர்ந்த செல்லதுரை(54)சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாத்தலையை சேர்ந்த சேட்டு என்பவர், திருவானைக்காவல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இறந்தார்.மற்றொருவர சிகிச்சையில் உள்ளார். இது குறித்து, கொள்ளிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

images 26 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.