images 27 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்து-இருவர் பலி..

சற்றுமுன்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த இருவர் மீது கார் மோதிய விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மலையடிப்பட்டியை சேர்ந்த இருவர் இருசக்கர வாகனத்தில் மதுரை நோக்கி சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் லட்சுமியாபுரம் விலக்கு அருகே உள்ள பாலத்தின் ஓரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இரு சக்கர வாகனத்தின் அருகே நின்று இருவரும் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இருந்து நாகூர் தர்காவிற்கு செல்ல 5 நபர்களுடன் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் மற்றும் அருகே நின்றிருந்த இருவர் மீதும் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு அருகில் உள்ள ஓடையில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரும் ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் காரில் பயணம் செய்த 5 பேர் காயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து நத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற் கட்ட விசாரணையில் உயிரிழந்தது மலையடிபட்டியைச் சேர்ந்த அய்யனார் மற்றும் ராமசுப்பு என்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து இந்த பகுதியில் விபத்து என்பது அடிக்கடி ஏற்பட்டு வருவதாகவும் விபத்தை தடுக்க பேரிகார்டு அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

images 27 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.