மன்னார் வளைகுடா கடலோர பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..

தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடலோர பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்துவருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடலோர பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ்  பார்வையிட்டு ஆய்வு செய்த பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களிடையே பறவைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், பறவைகளின் வாழ்விடங்களை பாதுகாப்பதற்காகவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மன்னார்வளைகுடா கடலோர பகுதிகளுக்கு உட்பட்ட முள்ளக்காடு, முயல் தீவு, ரோச் பூங்கா, பழையகாயல், மணப்பாடு, வேப்பலோடை, வேம்பார் உள்ளிட்ட இடங்களில் மும்பை இயற்கை மற்றும் வரலாற்று மைய விஞ்ஞானி பாலச்சந்திரன் தலைமையிலான குழுவினர் மற்றும் வனத்துறையினர், தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள் 5 குழுக்களாக பிரிந்து நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளை கடந்த 2 நாட்களாக மேற்கொண்டனர்.

முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்தாண்டு மாவட்டத்தில் நீர்வாழ் பறவைகள் அதிகமான அளவில் காணப்படுகின்றன. குறிப்பாக நாரைகள் ஆயிரக்கணக்கில் வந்துள்ளன. மேலும் பொன்நிற உப்பு கொத்தி, வெண்மார்பு உப்பு கொத்தி, அரிவாள் மூக்கு உல்லான், சின்னமூக்கு உல்லான், பேதை உல்லான், மஞ்சள்கொத்தி உல்லான், ஆத்து மண்கொத்தி, பச்சைக்கான் உல்லான், சங்கு வளை நாரை, கரண்டிவாயன், வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் பரவலாக காணப்படுகின்றன. இந்த பறவைகளின் எண்ணிக்கை தொடர்பான விவரம் கணக்கெடுப்பு முடிவில் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

images 19 2 - 2026
202201292354496732 Bird Survey in the Gulf of Mannar SECVPF - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories