1710960 thiruvattar - 2026

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கருவறை விமானம் சுத்தப்படுத்தும் பணி ..

நெல்லை

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் மலைநாட்டு திருப்பதி கமில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் ‌கருவறை விமானம் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

1710960 thiruvattar - 2026
images 67 2 - 2026

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் வரும் ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. தேவபிரசன்னம் பார்க்கப்பட்டபோது பல்வேறு பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் எனகூறப்பட்டது. திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 400 ஆண்டுகளுக்கு பின்னர் அடுத்த மாதம் ஜூலை6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி மூலவர் சிலை புதுப்பிக்கும் பணி, மீயூரல் ஓவியங்கள் சீரமைக்கும் பணி, மடப்பள்ளி சீரமைப்பு ஆகியன நடந்து வருகிறது. கோவில் வெளிப்பிரகார பாதையில் போடப்பட்டிருந்த கற்கள் வழுக்கும் தன்மையுடன் இருந்ததால், அவற்றை சாதாரண கல்லாக மாற்றும் பணி நடந்து வருகிறது. தேவபிரசன்னம் பார்க்கப்பட்டபோது பல்வேறு பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் எனகூறப்பட்டது. அதன்படி பெரும்பாலான பூஜைகள் நிறைவடைந்து விட்டது.

பிரகாரங்களில் வர்ணம் பூசும்பணி நடந்து வருகிறது. கோவில் கருவறையின் மேல்பகுதி விமானம் சுத்தப்படுத்தி அதன் மீது வர்ணம் பூசும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். வருகிற 29-ந் தேதி முதல் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்குகிறது. 30-ந் தேதி பாலாலயத்தில் பூஜையில் இருக்கும் அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் கருவறைக்கு 7 ஆண்டுகளுக்கு பின்னர் எடுத்து செல்லப்படுகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் 5-ந் தேதி வரை பல்வேறு பூஜைகள் நடைபெறும். ஜூலை மாதம் 6-ந் தேதி காலை 6 மணி முதல் 6.50-க் குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறும். 9-ந் தேதி தங்கக்கொடிமர பிரதிஷ்டை நடக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறும். திருவட்டாறு பஸ்நிலையத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் சாலை குண்டு குழிகளுடன், இருபுறமும் புதர்கள் மண்டி மோசமான நிலையில் உள்ளது. அதுபோல் திருவட்டாறு சந்தை அருகே ஈனாச்சி அம்மன் கோவிலில் இருந்து ஆதிகேசவப்பெருமாள் கோவில் வரையுள்ள அணுகு சாலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் இந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.