கன்னியாகுமரி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் காந்தி மண்டபத்தில் தியானம் செய்தனர்.
அவர்களுடன் ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும், திமுக கூட்டணிக் கட்சியினரும் உடன் இருந்தனர்.
இந்தியாவை ஒருங்கிணைப்போம் என்ற முழக்கத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி இன்று மாலை தொடக்கி வைக்கவுள்ளார்.
அதற்காக ராகுல் காந்தி கன்னியாகுமரிக்கு வருகைப் புரிந்துள்ளார். கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளூவர் சிலையை நேரில் சென்று பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து தற்போது காந்தி மண்டபத்திற்குச் சென்றுள்ளார். அங்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை ராகுல் காந்தி வரவேற்றார். தற்போது இருவரும் காந்தி மண்டபத்தில் தியானம் மேற்கொண்டுள்ளனர்.
அவர்களுடன் ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் தலைவா்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோர் உள்ளனர்.
இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமைப் பயணம் தொடங்கவுள்ளது. 148 நாள்கள் 3,600 கி.மீ. மேற்கொள்ளப்படும் இந்த நடைபயணத்தில் ராகுலுடன் 118 காங்கிரஸ் தொண்டா்கள் வெள்ளைச் சீருடை அணிந்து பயணிக்க உள்ளனா். ஒரு நாளைக்கு 25 கி.மீ. தொலைவு நடப்பது என தீா்மானிக்கப்பட்டுள்ளது.