
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, முதுகலை விலங்கியல் மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் உலக இதய தினம் கருத்தரங்க அறையில நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜெய்நிலாசுந்தரி, தலைமை தாங்கினார்.
விலங்கியல் துறை தலைவர் மாருதி கலைசெல்வி அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் இதயத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்றும் ஒழுங்கான உடற்பயிற்சியை கடைபிடிக்க வேண்டும் என்றும் பெற்றோருடன் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டும் என்றும் மேலும் செல்போன்களை அதிக அளவு உபயோகிக்க கூடாது என்றும் இதயத்தை பாதுகாப்பதற்கான அனைத்து விஷயங்களையும் விரிவாக மாணவியருக்கு எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியினை ஸ்வேதா மூன்றாம் ஆண்டு விலங்கியல் துறை பிரதிநிதி மாணவி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விலங்கியல் துறை பேராசிரியர்கள் வசந்தி, பாரதி, சாந்தி பிரியா ,முனைவர்கள் கவிதா, கலைவாணி, ராமலக்ஷ்மி மற்றும் ஆய்வக உதவியாளர்கள் கௌசல்யா, கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் உதவி பேராசிரியை இசக்கியம்மாள் நன்றி கூறினார்.