
கடையம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வீராசமுத்திரம் பகுதியில் 5 பேருக்கு காயச்சல் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடையம் அருகே உள்ள வீராசமுத்திரம் பகுதியில் 5 பேருக்கு காயச்சல் ஏற்பட்டது. அவர்களை சோதனை செய்ததில் அவர்களுக்கு எலிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதில் 11 வயது சிறுமி ஒருவரும் அடங்குவார். இந்நிலையில் சிறுமி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல் மற்ற 4 பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்க்பபட்டுள்ளனர்.இதனால் இச் சம்பவம் தென்காசி நெல்லை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது




