ரூ.2 கோடி மதிப்பிலான பீடி இலைகள் கடத்தல்- மீனவர்கள் கைது..

Published:

1792478 fishermen arrest - 2026

ரூ.2 கோடி மதிப்பிலான பீடி இலைகளை படகுகளில் இலங்கைக்கு கடத்திய மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்து படகுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன்னார் வளைகுடாவில் வஜ்ரா கப்பல் மூலம் இந்திய கடலோர காவல்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது சர்வதேச கடல் எல்லைக்கு அருகே 4 படகுகளை கண்ட அவர்கள் அதனை வழிமறித்தனர். அந்த படகுகளில் இருந்த மீனவர்கள், கடலோர காவல்படையினரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர், அவர்களை விரட்டி பிடித்த கடலோர காவல்படையினர் தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் இரண்டு இந்திய படகுகள் மற்றும் இரண்டு இலங்கை படகுகள் மூலம் பீடி இலையை கடத்த முயன்றது தெரிய வந்தது. இந்த 4 படகுகளிலும் சுமார் 2.8 கிலோ எடை கொண்ட 104 மூட்டை பீடி இலைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்,பின்னர் உள்ளூர் அதிகாரிகளிடம் மீனவர்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகுகளையும் ஒப்படைத்தனர். அந்த மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img