சுசீந்திரம் தாணுமாலய மூர்த்தி கோயிலில் மார்கழி தேரோட்டம்..

1817213 img 20230105 wa0082 - 2026

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய மூர்த்தி சுவாமி கோயில் மார்கழி தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.இன்று இரவு 12 மணிக்கு சப்த வர்ண நிகழ்ச்சியும் நாளை 6-ந் தேதி காலை 10 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று சுசீந்திரம் அருள்மிகு ஶ்ரீ தாணுமாலய சுவாமி கோயில். பிரமன், திருமால், சிவபெருமான் ஆகிய மும்மூர்த்திகளும் இங்கு ஒன்றாக காட்சியளிக்கின்றனர். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த மாதம் (டிசம்பர்) 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

3ஆம் திருவிழாவான டிச.30 ஆம் தேதி மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5 ஆம் திருவிழாவான ஜன.1 ஆம் தேதி பஞ்ச மூர்த்தி தரிசனம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தினமும் காலை மாலை வேளைகளில் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 9ஆம் திருவிழாவான வியாழக்கிழமை (ஜன.5) காலை கங்காளநாதர் பிட்சாடனராக திருவீதியுலா வந்தார்.

இதைத் தொடர்ந்து கோயிலில் தட்டு வாகனத்தில் விநாயகர், சுவாமி, அம்பாள், அறம் வளர்த்த நாயகியும் எடுத்து வரப்பட்டனர். பின்னர் பெரிய தேரில் சுவாமியும், அம்பாளும், அம்மன் தேரில் அறம் வளர்த்த நாயகியும், பிள்ளையார் தேரில் விநாயகரும் எழுந்தருளினர்.இதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தேர் சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டது. பின்னர் 3 தேர்களும் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.சிவாய நம, திருச்சிற்றம்பலம், ஓம் காளி ஜெய் காளி என்று பக்தர்கள் விண்ணதிர முழக்கமிட்டு தேரை இழுத்தனர். அப்போது தேரின் மேல் ஆகாயத்தில் 3 கருடன் வட்டமிட்டது.  

இவ்விழாவில், தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், வ.விஜய்வசந்த் எம்.பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ஞானசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்மன் தேரை பெண்கள் இழுத்து வந்தனர்.3 தேர்களும் 4 ரத வீதிகள் வழியாக வந்து நிலையை அடைந்தது. தேரோட்டத் திருவிழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திருவிழாவை முன்னிட்டு நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து சுசீந்திரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. குமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று இரவு 12 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சாமி, வேளிமலை குமார சுவாமி ஆகியோர் விடை பெறும் சப்த வர்ண நிகழ்ச்சி நடக்கிறது. 10-ம் திருவிழாவான நாளை 6-ந் தேதி காலை 10 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. மாலையில் நடராஜர் வீதி உலாவும் இரவில் ஆராட்டும் நடக்கிறது.

WhatsApp Image 2023 01 05 at 11.jpeg - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories