திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கில் 66-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து,காவல்துறை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். பலூன்களையும் வானில் பறக்க விட்டார். பின்னர் திறந்த வாகனத்தில் சென்று காவல்துறையினர் அணிவகுப்பை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து சுதந்திரப்போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு முதலமைச்சர் பதக்கம் -பயனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகளை மாவட்ட ஆட்சியர் வழகினார். இவ்விழாவில் நெல்லை மாவட்ட காவல்துறை ஆணையர் சுமித் சரண், கண்காணிப்பாளர் நரேந்திர நாயர், பாராளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்யானந், மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தை வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.
அண்ணா விளையாட்டு அரங்கில் குடியரசு தின விழா கோலாகலம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari