செங்கோட்டை அனுமார் கோயில் கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் தீவிரம்

ஆன்மிகச் செய்திகள் நெல்லை
IMG 20190205 120835 - 2026

செங்கோட்டை ராமபக்த ஆஞ்ச நேயர் கோயிலில் வரும் 10ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

செங்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் மேல்புறம் வீற்றிருக் கும் ராம பக்த ஆஞ்சநேயர் கோயி லில் வரும் 10ம் தேதி மகா கும்பா பிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு 8ம்தேதி மாலை 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, மகா சங்கல் பம், அங்குரார்பணம், எஜமான் வர்ணம், கும்ப அலங்காரம், கலா கர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை, பூர் ணாகுதி, வேதபாராயணம், தீபா ராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.

9ம்தேதி காலை 8 மணிக்கு சூரிய சோம கும்ப பூஜை, விக் னேஷ்வர பூஜை, புண்யாகவாச னம், வேதிகா அர்ச்சனை, துவார பூஜை, 2ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, வேத பாராயணம், தீபாராதனை, இரவு 8.33 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் யந்திர ஸ்தாபனம் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.

கும்பாபிஷேக நாளான 10ம் தேதி காலை 6 மணிக்கு விக் னேஷ்வர பூஜை, புண்யாகவாச னம், சூரிய சோம கும்ப பூஜை, ரக் ஷபந்தனம், வேதிகா அர்ச்சனை, துவார பூஜை, 4ம் கால யாகசாலை பூஜை, ஸ்பர்சாகுதி, நாடி சந்தா னம், மகா பூர்ணாகுதி, தீபாரா தனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு தொடர்ந்து, காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் பாலவிநாய கர், பாலசுப்பிரமணியர், ராமபக்த ஆஞ்சநேயர், வழிவிடும் பரமேஸ் வரி அம்பாள் மற்றும் பரிவார தேவ தைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதனைத் தொடர்ந்து மகா அபிஷேகம், மதியம் 12 மணி அளவில் அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை ராமபக்த ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.