
செங்கோட்டையில் உள்ள குலசேகரநாதர் சுவாமி கோயிலில் நடந்த திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு தர்மஸவர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதர் சுவாமி கோயிலில் மாசிமகத்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இதே போல இந்தாண்டு மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி திருவாசகி சிவ.பிரேமா தலைமையில் நடந்தது.
இதில் திரளான சிவனடியார்கள் பங்கேற்று, திருப்பதிகங்களான திருக்கழுமலம், திருவையாறு, திருமுதுகுன்றம், திருவிழிமிழலை உள்ளிட்ட திருப்பதிகங்களையும் பாடி வழிபட்டனர்.

திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியில் ஆன்மிக அன்பர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்சிக்கான ஏற்பாடுகளை சிவனடியார்கள் செய்திருந்தனர்.



