பாவூர்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட போலீஸார் குறும்பலாப்பேரி – மேலப்பாவூர்சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள நியாயவிலைக் கடை அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த குறும்பலாப்பேரியைச் சேர்ந்த சு.நடராஜன்(58), மேலப்பாவூரைச் சேர்ந்த கி.வள்ளிநாயகம்(50) ஆகியோரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து 68 கேரள மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.940 ஐ பறிமுதல் செய்தனர். அப்போது அவர்கள் இருவரும் போலீஸாரை அவதூறாகப் பேசியதோடு, பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர் இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் சாமுவேல் ராஜையா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, நடராஜன் மற்றும் வள்ளிநாயகத்தைக் கைது செய்தார். செய்தி;செ.பிரமநாயகம்-தென்காசி
- Home
- உள்ளூர் செய்திகள்
- நெல்லை
- பாவூர்சத்திரம் அருகே லாட்டரி சீட்டு விற் பனை 2 பேர் கைது
