மகாத்மா காந்தி 150: நெல்லை மாவட்டத்தில் பாஜக., சிறப்பு யாத்திரை!

Published:

mahatma gandhi pathayathirai - 2026

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவை சிறப்புடன் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி பாஜக.,வினருக்கு கட்டளை இட்டுள்ளார். இதை அடுத்து நாடு முழுவதும் பாஜக.,வினர் விழிப்பு உணர்வு பாத யாத்திரையை நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். இன்னும் ஒரு வருடத்துக்கு இந்த யாத்திரைகள், நிகழ்ச்சிகளை நடத்த பாஜக.,வினர் திட்டமிட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, நெல்லை மேற்கு மாவட்ட பாஜக.,வினரும் மகாத்மா காந்தி-ஜியின் 150 வது பிறந்தநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, நாளை புதன் கிழமை மாலை 3 மணி அளவில், தென்காசி நகர பா.ஜ.க சார்பில் விழிப்புணர்வு பாதயாத்திரை தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி நடுபல்க், மேலகரம், நன்னகரம், குடியிருப்பு வழியாக குற்றாலம் பேருந்து நிலையத்தில் முடிவடைகிறது.

yathirai - 2026

இதே போல செங்கோட்டை நகர பா.ஜ.க சார்பில் வரும் 3ம் தேதி (வியாழகிழமை) மாலை 2.30 மணிக்கு காந்தியடிகளின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கோட்டை காலாங்கரையில் இருந்து பாதயாத்திரை புறப்பட உள்ளது.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Related articles

Recent articles

spot_img