
திருச்சி மணிகண்டம் ஒன்றியம் களக்காடு ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் சுமதி வரவேற்றார். மணிகண்டம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் தலைமை வகித்தார்.கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் கோவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் . சங்க தலைவர் நாகராஜன் வாழ்த்துரை வழங்கினார் .
ரோட்டரி சங்க திட்ட இயக்குனர் நாகராஜன் ,பள்ளி செயலாளர் சுப்பிரமணியன், டாஸ் அமைப்பு விக்னேஷ், அருண், தினேஷ், சிவராஜ், காசி, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனரும் யோகாசிரியருமான விஜயகுமார் மகாத்மா காந்தி அஞ்சல்தலை கண்காட்சியினை காட்சிப்படுத்தி விளக்கினார். நிறைவாக கார்த்திகேயன் நன்றி கூறினார்.
- யோகா விஜய்



