திருச்சியில் பெண் வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம் திறப்பு!

திருச்சி லைஃப் ஸ்டைல்
women advocate association - 2026

திருச்சியில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர் சங்க அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர்கள் சங்கத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பெண் வழக்கறிஞர்கள் சங்க அலுவலக திறப்பு விழா நடைபெற்றது .

தலைவர் ராஜேஸ்வரி ,துணைத் தலைவர் செல்வம் தமிழரசன் ,செயலர் ஜெயந்திராணி, துணைச் செயலர் நீமாவதி ,பொருளாளர் ராஜலட்சுமி, நிர்வாக குழு உறுப்பினர்கள் ஹாஜிரா பாஷா, கீதா லட்சுமி ,செந்தில் வடிவு, சத்தியபாமா, விஜயலட்சுமி, கீதா, ஷாநவாஸ் மற்றும் வழக்கறிஞர் சித்ரா உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

பெண் வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் கூடுதல் இடவசதியுடன் பொருட்கள் வைப்பதற்கு லாக்கர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  • யோகா விஜய்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.