புதுகை தபால் நிலையத்தில்… உலக மகளிர் தின நிகழ்ச்சி!

திருச்சி லைஃப் ஸ்டைல்
pudukottai voters vigit - 2026

புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் உலக மகளிர் தினம் மரம் நண்பர்கள்  சார்பில்  நடைபெற்றது !

புதுக்கோட்டையில்   உலக மகளிர் தினம்  மரம் நண்பர்கள்  சார்பில் தலைமை தபால்நிலையத்தில் பெண் தபால்காரர்களை  கௌரவிக்கும் நிகழ்வாக 08.03.2021அன்று   நடைபெற்றது

விழாவிற்கு மரம் நண்பர்கள் பேரா.சா.விஸ்வநாதன் தலைமை தாங்கினர்.  தலைமை தபால் அலுவலர் எஸ்.சத்தியமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்   கண்ணன் முன்னிலை வகித்தார்.

மரம் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர்  ஜி.எட்வின்       பெண் தபால்காரர்கள் எஸ்.லட்சுமி கே.எஸ்.அன்னலட்சுமி ஆர்.கவிதா கே.ராதிகா டி.கலைச்செல்வி ஆர்.ரம்யா, எஸ்.கோமதி ஆர்.சுமதி உள்ளிட்டோரை கௌரவித்து வாழ்த்திப் பேசினார்

 அவர் பேசுகையில் புயல், மழை, வெய்யில், சுனாமி, கரோனா என்று எதையும் பாராமல்  வீடுதோறும் சென்று தபால் கொடுக்கும் பெண் தபால்காரர்கள் பணி  சிறப்புடையதாகும் எப்போது தபால்காரர் வருவார் என்று பலரும் இன்னும் காத்திருப்பது வழக்கம் உண்டு நிச்சயம் அவர்களது வேலைகள் பாராட்டப்படவேண்டும் என்றார்.

நிகழ்வில்  பழனியப்பா மெஸ் கண்ணன்  பாரதவிலாஸ் கிருஷ்ணமூர்த்தி,  மொபைல் ராசு, பொறியாளர் ரியாஷ்கான் மற்றும் அப்துல்லா தலைமை தபால் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். . நிறைவாக  போஸ்ட்மேன் நாகராஜன்  நன்றி கூறினார்

  • செய்தி: டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.