
மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறை ஆதீனத்தில் தமிழ் வருடப்பிறப்பு பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறையில் மிகப்பழமையான ஆன்மீக சிறப்புமிக்க பிரசித்திபெற்ற திருவாவடுதுறை ஆதீனம் மடம் உள்ளது
சைவ மடங்களில் மிக தொன்மையான பழமையான மடங்களில் இதுவும் ஒன்றாகும்
மடத்தில் தற்போது 24 வது குருமகாசந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருமகா சன்னிதானமாக அமர்ந்து அருளாசி வழங்கி வருகிறார்கள்
மடத்தில் ஆண்டுதோறும் தமிழ் மாத சித்திரை மாதம் 1ஆம் தேதி ஆதீனத்தில் பஞ்சாங்கம் வாசித்து வழிபாடு செய்வது வழக்கம்
அதன்படி ஆதீனத்தில் 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது பஞ்சாங்கத்தில் ஒரு வருடத்திற்கான நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டது சன்னிதானம் முன்னிலையில் வாசிக்கப்பட்டது
இதில் முக்கிய ஆன்மீக பெரியவர்கள் சமூக இடைவெளியோடு மாஸ்க் அணிந்து கலந்துகொண்டு குருமகா சன்னிதானம் அருள் ஆசி பெற்றுச் சென்றனர்