
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சித்திரை பெருவிழா இன்று முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா காரணமாக சித்திரை பெருவிழா திருக்கோவில் வளாகத்தில் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் என்று முன்னரே அறிவிக்கப் பட்டிருந்தது.

அதன்படி, இன்று கொடியேற்ற விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இன்று முதல் ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதிக்கப்படும் என்பது குறித்த விவரங்களை திருக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கோவிலுக்குள் செல்ல கிழக்கு, தெற்கு நுழைவாயில் வழியாக மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 24-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெறுகிறது. அதற்குப் பின் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.