கோயில் நிகழ்ச்சியில் ’செந்தில் பாலாஜியால்’ அனுமதி மறுப்பு! கம்பி வேலியில் ‘எம்பி’க் குதித்த ஜோதிமணி!

karur senthil balaji - 2026
  • செந்தில் பாலாஜியின் ராஜ்ஜியத்தில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி
  • காங்கிரஸ் பெண் எம்.பி ஜோதிமணிக்கு அனுமதி மறுப்பு
  • கம்பி வேலியினை ஏறிகுதித்த பெண் காங்கிரஸ் எம்.பி
  • செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி மறுப்பு

தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கரூர் கம்பம் ஆற்றுக்கு விடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது – திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறும் நபர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சியில் அனுமதி வழங்கப்பட்டது. செய்தியாளர்களுக்கு அனுமதி பாஸ் கொடுத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது. செய்தியாளர்களுக்கும், போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு நிலவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அளவில் உள்ள மாரியம்மன் ஆலயங்களில் மிகவும் விமர்சையான ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் ஆலயத்தின் வைகாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நேற்று மாலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது. முன்னதாக அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் திமுக மாநகர உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே இந்நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கரூர் மாரியம்மன் ஆலயத்திலிருந்து கச்சேரி பிள்ளையார் ஆலயத்தின் வழியாக கரூர் ஐந்து ரோடு அமராவதி ஆற்றிற்கு கம்பம் கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும், திமுக பிரமுகர்கள், திமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் என்று ஏராளமானோர் வழிநெடுகிலும் விஐபி பாஸ் வைத்திருப்பவர்கள் போல சென்றனர்.

இந்நிலையில்,. ஏற்கனவே இந்த திருவிழாவிற்காக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உள்ளூர் விடுமுறை அறிவித்திருந்தார். இதுமட்டுமில்லாமல், இந்த திருவிழாவிற்காக கரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களை சார்ந்த காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டிருந்தனர்.

karur reporters - 2026

கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சிக்காக இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் ஆகியோர் கூறினால் மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படும் என்று பசுபதிபாளையம் ஆய்வாளர் செந்தில்குமார் கூறிய நிலையில், பத்திரிக்கையாளர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சிக்கான அனுமதி அட்டையுடன் காத்திருந்தும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறும் நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இதுமட்டுமில்லாமல், சில மணி நேரம் காத்திருந்த கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பொறுமைக்கொரு எல்லை உண்டு என்கின்ற விதத்தில் கம்பிவேலிகளை தாண்டி குதித்தார். ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சியில் முழுக்க, முழுக்க திமுக நிர்வாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மட்டுமல்லாமல், திமுக மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

செய்தி சேகரிப்பதற்காக பாஸ் வழங்கப்பட்ட செய்தியாளர்கள் யாரையும் இந்நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படவில்லை, பல ஆண்டுகாலமாக அந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரித்து வந்த செய்தியாளர்களுக்கு திடீரென்று அனுமதி மறுத்த சம்பவம், கரூர் வரலாற்றிலேயே புதுமையான ஒரு சம்பவமாக இருந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories