நாயாக மாற ஆசை.. லட்ச கணக்கில் செலவழித்து மாறிய இளைஞர்!

Published:

dog 5 - 2026

நாய் போன்று மாற வேண்டும் என்ற தனது ஆசையை 12 லட்சம் ரூபாய் செலவுசெய்து ஒருவர் நிறைவேற்றி அனைவரையும் வியக்கச்செய்துள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறு வயது முதலே விலங்கு போன்று மாறி வாழ வேண்டும் என்ற விபரீத ஆசையுடன் இருந்துள்ளார். ஆனால், அது சாத்தியமற்றது என்பது பின்னர் தெரியவந்தது.

இந்த நிலையில், விலங்கு போல தோற்றமளிக்க விரும்பிய ஜப்பானியர் ஒருவர் தனது கனவை நிறைவேற்றிக் கொண்டதாகத் தெரிகிறது.

இவர் சமீபத்தில் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தன்னை முற்றிலும் நாய் போன்று மாற்றிக்கொண்டதாக கூறினார். தனக்குப் பிடித்த விலங்காக மாற்றிக் கொண்ட பிறகு அவன் மனிதனைப் போலத் தெரியவில்லை என்பது அந்த வீடியோவில் தெளிவானது.

இது எப்படி சாத்தியமானது என்றால், அதிக பணம், சில நவீன தொழில்நுட்பம் உதவியுடன் என்றே கூறவேண்டும். யூடியூப்பில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், நாய் போன்ற உடையணிந்து அதேபோன்று நடந்துசென்று பாவனைகள் செய்கிறார் அந்நபர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

சுமார் 2 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ.12 லட்சம்) செலவானதாக கூறப்படுகிறது. இந்த ஆடை அவரது மனித உடலை முழுவதுமாக மறைத்து நாய் போன்றே தோற்றமளித்ததால் சமூக வலைதளங்களில் பலரும் வியப்புடன் கமாண்ட் செய்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img