முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது என புதுடில்லி்யில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இத குறித்து அவர் மேலும் கூறியதாவது: அணை பாதுகாப்பாக உள்ளதா என்பது தான் முதல் பிரச்னை: அனை தேவையான அளவு பலமானதாக இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.மக்களின்பாதுகாப்பு குறித்து பிரச்னை அணுகப்பட்டது. தமிழகத்துடனான சுமூகமான உறவை பேண விரும்புகிறோம். சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு அணை பலமாக உள்ளது என தெரிவித்துள்ளது. தற்போது ஆய்வு மேற்கொண்டு வரும் குழுவும் அணை பலமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஆய்வு முடிவுகளின் தன்மையை பொறுத்தே பிரச்னைகளை அணுக முடியும், என கூறினார்
[wp_ad_camp_4]



