மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்லக்கோரி மறியல் போராட்டம் 

IMG 20230130 WA0093 - 2026

திருச்சி மாவட்டம் மணப்பாறை வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி மதிமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது .ரயிலை பறிக்க ஊர்வலமாக சென்றவர்கள் ரயில் நிலையம் முன்பு தடுத்து நிறுத்தி 75 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், திருச்சி திண்டுக்கல் மார்க்கமாக மணப்பாறை வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி மதிமுக  ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்திருந்தது.

 அதனைத்தொடர்ந்து ரயில் நிலையம் பகுதியில் சட்டம் ஒழுங்கு போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார்கள் அதிக அளவில் காலை முதலே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில் பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாக கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களிட்டு சென்ற கட்சியினரை ரயில் நிலையம் முன்பாகவே போலீஸார் தடுத்தி நிறுத்தினர். இதில் இருத்தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் ரயில் மறியலில் ஈடுபட அனுமதிக்கவில்லை.

 இதற்கிடையே மாலை மணப்பாறை ரயில் நிலையம் வந்தடைந்த குருவாயூர் அதிவிரைவு ரயிலுக்கு போலீஸார் பாதுக்காப்பு அளித்தனர்.  ரயில் நடைமேடையிலிருந்து புறப்பட்டபோது அங்கு பயணிகள் போல் வந்த மூன்று பேர் மதிமுக கட்சி கொடியினை கைகளில் ஏந்தி கோஷங்களிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

அதனைத்தொடர்ந்து ரயில் மறியல் செய்ய வந்த மதிமுகவினர் 75 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்க பட்டனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories