images 2023 03 03T153722.679 - 2026

வரும் தேர்தலில் திருமா டெபாசிட் வாங்குவதே கடினம்-அண்ணாமலை..

திருச்சி
images 2023 03 03T153722.679 - 2026

மக்களவை தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் தான். யார் பாஜகவிற்கு வந்தாலும் அரவணைப்பது எனது கடமை.திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்று திருமாவளவன் முடிவு செய்துவிட்டார் என திருச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை‌ செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்

திருச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளதாவது,

விசிகவின் கோட்டையாக சொல்லப்படும் கடலூர் மாவட்டத்திலேயே பாஜக நன்றாக வளர்ந்து வருகிறது. கூட்டணிக் கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக திருமாவளவன் சொல்வது தவறானது.

பிற கட்சி விவகாரங்களில் பாஜக எப்போதும் தலையிடாது. திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்று திருமாவளவன் முடிவு செய்துவிட்டார். அவர் தைரியமாக வெளியே வரட்டும். விசிக தலைவர் மாறி மாறி பேசி வருகிறார்.

2024 மக்களவை தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் தான். யார் பாஜகவிற்கு வந்தாலும் அரவணைப்பது எனது கடமை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.