
கரூர் மாவட்டத்தில் கரூர் லைட் ஹவுஸ் கார்னர், சுங்ககேட், தாந்தோன்றிமலை, காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
உணவுப்பாதுகாப்பு துறையின் கரூர் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் சிவராமபாண்டியன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் மதுரைவீரன் ஆகியோர் கரூர் மாவட்டத்தில், கரூர் லைட் ஹவுஸ் கார்னர், சுங்ககேட், தாந்தோன்றிமலை, காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், சாலையோர கடைகள் மற்றும் பழக்கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் செயற்கை வண்ண நிறமிகள் ஏதேனும் ஏற்றப்பட்டுள்ளதா ? கடைகளில் அதற்கான ஊசிகள் ஏதேனும் உள்ளதா ? அழுகிய பழங்கள் ஏதேனும் விற்பனை செய்யப்படுகின்றனவா ? சாலையோரங்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ள பழங்களில் எலிகள் ஏதேனும் கடித்து சேதராமாகியுள்ளதா ? உள்ளிட்டவைகள் குறித்த சோதனை நடத்தப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு துறையின் கரூர் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் சிவராமபாண்டியன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் மதுரைவீரன் ஆகியோர் அடங்கிய இந்த குழுவில் தர்பூசணி பழங்கள் குறித்த அதிரடி ஆய்வு வியபாரிகள் மத்தியில் ஒரு பரபரப்பினை ஏற்படுத்தியது