31-வது ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறுகிறது.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலில் நியமிக்கப்பட்டார். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இந்
த நிலையில் அந்த சர்ச்சையிலிருந்து தப்பிக்க மேலும் பலரை இந்திய அணியின் நல்லெண்ணத் தூதர்களாக நியமிப்பதில் ஐஓஏ தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி சச்சின், ஏ.ஆர்.ரஹ்மான், அபிநவ் பிந்த்ரா ஆகியோரைத் தூதராக்கும் முயற்சியில் இறங்கியதோடு, அவர்களிடம் வேண்டுகோளும் விடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின. அபிநவ் பிந்த்ரா, சச்சின் ஆகியோர் ஐஓஏவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இந்நிலையில் நல்லெண்ணத் தூதராகப் பணியாற்ற ஆர். ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.



