டீப் டிஸ்கஷன்தான்! நம்ம டூப் டிஸ்கஷன்தான்!!

என்னங்க இது… திக் திக் இப்படி திக்கு திக்குன்னு உளறிக்கொட்டுறாரு..?
ஏன் என்னாச்சு… கொடுத்த வேலையை நல்லாத்தானே செய்துக்கிட்டிருக்காரு?!
அதில்லே..! ப்ளான் 1, ப்ளான் 2,. ப்ளான் 3 அப்டின்னு ஏதேதோ சொல்லி எல்லாத்தையும் ஆர்.எஸ்.எஸ்தான் இயக்குதுங்கிறாரே!
ஆமா… எதுனா பிரச்சினைன்னா அப்படிச் சொல்லனும்னுதானே 1947லிருந்தே நம்ம கட்சிக்காரங்களை பழக்கப்படுத்தி வெச்சிருக்கோம்?!
ஆனா…. இப்போ அதுவே வினையா முடிஞ்சிடும்னு பயமாயிருக்கு!
ஏன் எல்லாம் சரியாத்தான் போயிட்டிருக்கு. நெனச்ச மாதிரியே அண்ணா ஹசாரே குழு பயந்து பிரிஞ்சிட்டாங்க… ஒருத்தர ஒருத்தரு அடிச்சிக்கிறாங்க… நாமதான் ஆர்.எஸ்.எஸ் அப்படிங்கிற தீண்டாமை அஸ்திரத்தை சரியா போட்டிருக்கமே!
ஆனா பாருங்க… பொதுமக்கள் பாபா ராம்தேவை நல்லவருங்கிறாங்க… அண்ணா ஹசாரேவை ரொம்ப நல்லவருங்கிறாங்க… ரவிசங்கர்ஜியை ரொம்ப ரொம்ப நல்லவருங்கிறாங்க… இப்படி எல்லாரும் நல்லவங்கன்னு நம்பிக்கிட்டிருக்கிற எல்லாரையும் ஆர்.எஸ்.எஸ் சொல்லித்தான் இயங்குறாங்கன்னு நம்ம திக்கு திக்கு சிங் சொல்லுறாரே… அதுனால, இதுவரை மோசமானவங்கன்னு மக்கள் நெனச்சிக்கிட்டிருக்கிற ஆர்.எஸ்.எஸ்.காரங்களை நல்லவங்கன்னு நினைக்கும்படியா செய்யிறாரோ? இவரு நல்லவரா கெட்டவரான்னே தெரியலியே?!