பிரதம ஜோஸியக்காரர்

நமஸ்தே நமஸ்தே.. வாங்க வாங்க… என்ன பிரதமர்ஜி.. நல்லா படிச்சிட்டிருக்கீங்க போலிருக்கு?!
நமஸ்தே… என்ன ராகுல்ஜி சொல்றீங்க? நான்தான் அப்பவே நிறைய படிச்சிட்டேனே!
இல்ல இல்ல… நான் சொன்னது ஜோஸியப் புத்தகங்களை…
அப்படின்னா? புரியலியே!
அதான் இப்போ நல்ல நேரம், நட்சத்திரம், ராசி, ஹோரைன்னு எல்லாம் பாக்குறாமாதிரி தெரியுதே! இதுதான் ஊழலை ஒழிக்க நல்ல நேரம்னு பஞ்சாங்கம் பாத்து சொல்லியிருக்கீங்களாம்..! எனக்கும் பார்த்து சொல்லுங்க. .. எது நான் என்ட்ரி ஆகுறதுக்கு நல்ல நேரம்னு!