images 11 1 - 2026

இளையராஜாவுக்கு ஆதரவாக ஜே.பி.நட்டா..

அரசியல்

அம்பேதக்ருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்ட விவகாரத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆதரவு அளித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இளையராஜாவை அவமதிப்பதா?இளையராஜாவின் கருத்து பிடிக்கவில்லை என்றால் விமர்சிப்பதா? இதுதான் ஜனநாயகமா?
ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் எதிரான கருத்தை தெரிவித்தால் எதிர்ப்பதா? ஆதரவாக பேசவில்லை என்பதால் அவரை விமர்சிப்பது தவறான அணுகுமுறையாகும்.
கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜகவினர் குறிவைத்து தாக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

images 11 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.