images 9 1 - 2026

நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப கவர்னர் முடிவு..!?

சற்றுமுன்

நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக அரசால் இருமுறை நிறைவேற்ற பட்ட நீட் விலக்கு மசோதா கவர்னர் பரிசீலனை யில் இப்போது வரை உள்ளது.தமிழக அரசின் தொடர் அழுத்தம் காரணமாக மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப கவர்னர் முடிவு எடுத்துள்ளதாகவும் சிலர் இந்த மசோதா குறித்து சட்டரீதியான முழு ஆலோசனை பெற்று விட்டதன் அடிப்படையில் ஜனாதிபதி ஒப்புதலுக்கு கவர்னர் அனுப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.

images 9 1 - 2026

கவர்னர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்து போட்டு ஜனாதிபதிக்கு அனுப்பினாலும் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் வழங்குமா? என்பது அதன் பிறகுதான் தெரியவரும்.

கவர்னர் இந்த மசோதாவை ஜனாதிபதிக்கு நேரடியாக அனுப்ப முடியாது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்ட அமைச்சகத்துக்குதான் அந்த மசோதா சென்றடையும். மத்திய அரசு அதற்கு ஒப்புதல் வழங்கினால் மட்டுமே ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.இதன் பிறகு ஜனாதிபதி என்ன நடவடிக்கை மேற்கொள்வார் இந்த மசோதா மீது என்பது மில்லியன் டாலர் கேள்வி எழுப்புகிறது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.