IMG 20220418 120522 - 2026

இலங்கை நீதிமன்றம் 19 தமிழக மீனவர்களை விடுதலை செய்து உத்தரவு..

சற்றுமுன்

இலங்கை நீதிமன்றம் இன்று எல்லை தாண்டி மீன்பிடித்து கைது செய்யப்பட்ய 19 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த 2-ம் தேதி கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்றுடன் மீனவர்களின் சிறைக்காவல் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, அவர்களின் காவலை நீடிக்காமல் இலங்கை நீதிமன்றம் 19 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

IMG 20220418 120522 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.