ராமகிருஷ்ணாபுரம் செக்டார் 7-இல் அமைந்துள்ள மலைமந்திர் ஸ்ரீசுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் இன்று, கோயிலின் நான்காவது மகா கும்பாபிஷேகத்தின் நான்காம் ஆண்டு விழா (வார்ஷிகோத்ஸவம்) நடைபெற உள்ளது.
இக்கோயிலில் நான்காவது மகா கும்பாபிஷேகம் கடந்த 2014, ஜூலை 2-ஆம் தேதி நடைபெற்றது. இதன் நான்காவது ஆண்டு விழா அதாவது வார்ஷிகோத்ஸவம் இன்று கோயில் வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதையொட்டி, இன்றைய தினம் காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் உதஸ்வம் தொடங்குகிறது.
இதைத் தொடர்ந்து, மகா கணபதி பூஜை, சுப்ரமண்ய பஞ்ச தசக்ஷரி மகா யக்ஞம், ஏதாதச ருத்ரஜப பாராயணம், 108 சங்க ஸ்தாபனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். இதையடுத்து, மூலவருக்கு மகா அபிஷேகம், சுவாமிநாத சுவாமிக்கு சங்காபிஷேகம் நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெறும். மாலை 7 மணிக்கு வேதபாராயணம், திருப்புகழ் பஜனை, நாகஸ்வர கச்சேரியுடன் தங்கரதத்தில் சுவாமி பவனி நடைபெற உள்ளது.
இந்த உத்ஸவத்தில் பக்தர்கள் திராளகப் பங்கேற்று சுவாமியின் அருளைப் பெறுமாறு ஸ்ரீசுவாமி நாத சுவாமி சேவா சமாஜத்தின் தலைவர் எஸ். பட்டாபிராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.



