ஓபிஎஸ் க்கு சரியும் ஆதரவாளர்கள் எண்ணிக்கை..

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 6 ஆக சரிந்துள்ளது.அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஜூன் 23ந்தேதி (நாளை) நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக கடந்த 14ம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் அதிமுகவுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதற்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிமுகவில் மிகப்பெரிய பூகம்பம் வெடித்து உள்ளது.  இந்த சூழலில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 6 ஆக சரிந்துள்ளது. இன்று காலை வரை 7 மாவட்ட செயலாளர்கள் பன்னீர் செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், ஓபிஎஸ் அவர்களின் தீவிர ஆதரவாளரான சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் ஈபிஎஸ் அணிக்கு தாவியுள்ளார். வேளச்சேரி அசோக் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேளதாளத்துடன் 300க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களோடு பழனிசாமி இல்லம் சென்று மாவட்ட செயலாளர் அசோக் ஆதரவு தெரிவித்துள்ளார்.இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 6 ஆக சரிந்தது.

அதிமுகவில் நிர்வாகரீதியான 75 மாவட்டங்களில் பெரும்பான்மை, அதாவது 69 மாவட்டச் செயலாளர்கள் தங்கள் ஆதரவை எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துள்ளனர். பன்னீர் செல்வத்திற்கு மாவட்ட செயலாளர்கள் தேனி சையதுகான், குமரி அசோகன், திருச்சி வெல்லமண்டி நடராஜன், தஞ்சாவூர் தெற்கு வைத்தியலிங்கம், தஞ்சை வடக்கு சுப்ரமணி, பெரம்பலூர் ராமச்சந்திரன் மட்டுமே ஆதரவாக உள்ளனர்.இதுதவிர, ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளராக இருந்த மைத்ரேயன் தற்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து மைத்ரேயன் ஆதரவு தெரிவித்தார். 

இந்த நிலையில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்துக்கு செல்லும் எண்ணம் தற்போது இல்லை என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஜூன் 23ந்தேதி (நாளை) நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக கடந்த 14ம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் அதிமுகவுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதற்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிமுகவில் மிகப்பெரிய பூகம்பம் வெடித்து உள்ளது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சமரசம் செய்ய எடப்பாடி தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதனிடையே அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 தீர்மானங்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஒப்புதலுக்காக 23 தீர்மானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஓ.பன்னீர்செல்வத்திடம்  இருப்படைக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் ஒற்றைத் தலைமை குறித்த தகவல் ஏதும் இடம்பெறவில்லை.

ஓ.பன்னீர்செல்வத்திடம் தீர்மானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டபடி நாளை பொதுக்குழு கூடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு செல்லும் எண்ணம் தற்போது இல்லை. தேர்தல் வரும் போது தேர்தல் ஆணையத்துக்கு செல்வோம் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

images 10 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories