கொள்ளை அடிப்பதற்காகத் தான் மின் கட்டண உயர்வு: கரூரில் விஜய பாஸ்கர் ஆவேசம்!

vijayabhaskar - 2026

மின்வெட்டு செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றும், கொள்ளையடிப்பதற்காக தான் என்றும், சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவைகளை தொடர்ந்து தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கின்றது – பேருந்து கட்டணமும் உயரப்போகின்றது – கரூர் ஆர்பாட்டத்தில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவேசமாகப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியவை…

தமிழக அரசின் சொத்துவரி உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வினை கண்டித்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர். மக்களுடைய வாழ்வாதாரத்தினை பாதிக்க கூடிய அளவில் இந்த மின்கட்டண உயர்வு என்றும், மீட்டர் வாடகை மாதம் ரூ 60 என்றும், அடுத்தது, டிஜிட்டல் ஸ்மார்ட் மீட்டர் வருகின்றது, அதிலும் கொள்ளை, கொள்ளையடிப்பதிலேயே, கருணாநிதிக்கே கற்றுக் கொடுக்க கூடியவர் நம்மூர் திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி

கடந்த 10 ஆண்டுகாலம் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்த நிலையில், தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், மின் வெட்டு ஆட்சியில் கொள்ளையடிப்பதற்காக உருவாக்கப்பட்டது. சொந்தத்திற்காகவும், ஊழல் செய்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கத்திலிருந்து தற்போது தான் மீண்டு எழுந்து வரும் நிலையில், அதே மக்களுக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது ஆகவே, எந்த காரணமாக இருந்தாலும் மத்திய அரசின் மீது பழிபோடுகின்றது தான் திமுக அரசின் வேலை என்றும், ஆகவே மத்திய அரசினை எதிர்த்து கேட்க வேண்டியது தானே என்றும், ஆகவே, தற்போது பேருந்து கட்டணமும் மக்களுக்கு பம்பர் பரிசாக திமுக அரசு கொடுக்க காத்திருக்கின்றது.

மேலும், போக்குவரத்து துறையில் 4 ஆண்டு காலத்தில் தமிழக வரலாற்றில், 38 ஆயிரம் போக்குவரத்து டிரைவர், கண்டக்டர் ஆகியவைகளை நியமித்து வரலாற்று சாதனை பிடித்தவரும் நம்ப டாஸ்மாக் மந்திரி தான் என்றும் அவர் கூறினார். அதில் ஆயிரம் கோடி கொள்ளையடித்து தற்போது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. பணம் யார் கொடுத்தாலும் சரி, வாங்கி கொண்டு போஸ்ட்டிங் போட்டு விட்ட பெருமையும் செந்தில்பாலாஜியையே சாரும்,

ஆகவே, பேருந்திற்கு ஏற்றவாறு டிரைவர் கண்டக்டர் போடுவது ஒருபுறம் ஆனால் செந்தில்பாலாஜி, டிரைவர் கண்டக்டரை போட்டுவிட்டு அதற்கு தகுந்தாற்போல், பேருந்துகளை போட்ட ஒரே மந்திரி என்றார் விஜயபாஸ்கர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories