காந்தியை மறந்த கரூர் மாநகராட்சி! கண்டுக்காத கரூர் காங்கிரஸ் எம்.பி., சோதிமணி!

karur congress1 - 2026

காந்தியை மறந்த மாநகராட்சி ! போராட்ட களத்தில் குதிப்பாரா ? காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ?

மண்டையில் இருந்த கொண்டைய மறந்த மாதிரி, சுதந்திர தின விழாவில் ஜொலி ஜொலிக்கும் மாநகராட்சியில் உள்ள இரண்டு மகாத்மா காந்தி சிலைகளை மறந்தது ஏன் ? கேள்விக்கணைகளில் கரூர் மாநகர மக்கள்

கரூர் என்றால் வணிகம், வீட்டு உபயோக துணி பொருட்கள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி, கொசுவலை, பஸ்பாடி தொழில் என்றெல்லாம் உலக அளவில் வெகு விமர்சையாக பெயர் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி அறிவித்த கரூருக்கு விரைவில் ஏர்போர்ட் வரும் என்ற பெருமை எல்லாம் சாறும் என்ற நிலையில், அரசியல் களத்தில் மதிமுக என்கின்ற கட்சியே உருவானதே கரூர் மாவட்டத்தில் தான், அது மட்டுமில்லாமல், அகில இந்திய அளவில் கலக்கும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியின் சொந்த மாவட்டம், தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆகியோரது சொந்த மாவட்டமும் கரூர் தான்.

இத்தகைய புகழ் பெற்ற கரூர், நகராட்சியிலிருந்து, மாநகராட்சியான பிறகு 75 வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் முதல் பெண் மேயரின் கரங்களால் கரூர் மாநகராட்சி சுதந்திர தினம் கொண்டாட உள்ளது. இந்நிலையில், கரூர் மாநகராட்சியில் வண்ண அலங்கார விளக்குகள் அலங்காரம் செம தூள், அதே நேரத்தில் மாநகராட்சியின் முன் அமைந்துள்ள ஆசாத் பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலையை அப்படியே அம்போ என்று விட்டு விட்டனர், வண்ணவிளக்குகள் காந்தி சிலையில் மிஸ்ஸிங்,

karur congress - 2026

இந்த ஆசாத் பூங்கா மற்றும் அதிலிருக்கும் மகாத்மா காந்தி சிலை ஆகியவற்றை கரூர் ஜூபிலி லிட்டரி அசோஸியேசன் கட்டுப்பாட்டில் தான், இயங்குவதாக கூறும் அதிகாரிகள், அந்த ஜூபிலி லிட்டரி அசோஷியேசனும் மின்னொளியில் மிண்ணுவது தான் கூடுதல் தகவல் ஆகும். அப்படி இருக்க, காந்தி சிலையும், அதனை சூழ்ந்த ஆசாத் பூங்காவும் எந்த ஒரு லைட்டும் போடவில்லை.

இது மட்டுமில்லாமல், கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அரசு சார்பில் நிறுவப்பட்ட காந்திசிலை மிகப்பெரிய அளவில் உள்ள நிலையில், அதனை பராமரிக்கவும் இல்லை, ரவுண்டானாவினையும் சுத்தப்படுத்தாமல் 75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்த சிலைக்கு எந்த ஒரு பங்கும் இல்லாதவாறு, தனியாக உள்ளது. ஒரு சீரியல் பல்பு கூட இல்லை, எதோ நிலா வெளிச்சத்திலும், ரோட்டின் ஓரத்தில் உள்ள மின்னொளியில் மட்டுமே ஜொலிக்கின்றது.

இந்த இரண்டு காந்தி சிலைகளையும், ஆசாத் பூங்காவினையும் கடந்த அதிமுக ஆட்சியில் பராமரித்ததால் தான் இந்த நிலைமை என்கின்றனர் அரசியல் நடுநிலையாளர்கள். இதுமட்டுமில்லால், கடந்த சில வருடங்களுக்கு முன்னர், இதே பகுதியில் முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது திருவுருவச்சிலைகளை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கும் நிலையில், இதே லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் சுமார் 3 அடிக்குள் அமர்ந்த நிலையில் இருந்த சேதமடைந்த மகாத்மா சிலைக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்று அப்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூருக்கு கெளரவம் சேர்த்திடும் வகையில் சிலையை வைத்து பின்பு அரசியல் செய்திட கூடாது ( அதாவது அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர், பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அறிஞர் அண்ணா ஆகியோருக்கு மட்டும் சிலை, அருகிலிருக்கும் மகாத்மா காந்தி சிலை சேதம் அடைந்த நிலையில் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாரே ) என்று கூறும் நிலைக்கு செல்ல கூடாது என்பதற்காக சுமார் 6 அடி உயரமுள்ள மகாத்மா காந்தி சிலை நின்றபடி தோற்றத்தில் உள்ள சிலையை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

அதற்கு முன்னதாக இந்த சிலை ஏற்கனவே காங்கிரஸார் வைத்தது என்றும் காங்கிரஸ் கட்சியினர் வைத்த சிலையை அதிமுக அரசு அகற்ற நினைக்கின்றது என்று கூறி கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி திடீர் சாலைமறியல் போராட்டத்திலும், தர்ணா உள்ளிட்ட போராட்டத்திலும் ஈடுபட்டு இந்த காந்தி சிலைக்காக கைது செய்யப்பட்டார். பின்பு ஆட்சியும் மாறியது. காட்சியும் மாறியது, திமுக ஆட்சி அமைத்து ஒன்றரை வருடங்களில் இந்த காந்தி சிலை கண்டு கொள்ளப்படவில்லை, காரணம் அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார் என்பதற்காக சாக்கு போக்கு சொல்லி வந்த நிலையில், வரும் சுதந்திர தினத்தன்றும் கூட அரசியலா ?

தற்போதைய திமுக அரசிற்கு ஊன்று கோளாக உள்ள காங்கிரஸ் கட்சி ஒருபுறம், அண்ணன் தங்கை பாசத்திற்கு எடுத்து காட்டாக விளங்கிய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியும், அமைச்சராவதற்கு முன்பு இருந்த செந்தில்பாலாஜி, அமைச்சரானதற்கு பின்னர் சகோதரி ஜோதிமணியை கழட்டி விட்டு விட்டு அரசியல் செய்யும் செந்தில்பாலாஜி, செந்தில்பாலாஜியின் அரசியலுக்கு எதிராக அவ்வப்போது நல்ல பல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் கரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட எம்.பி ஜோதிமணி, அதே கரூர் மாவட்ட நிர்வாகத்திற்குட்பட்ட, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திசிலைகள் விவகாரத்தில் மெளனம் காப்பாரா ? கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இல்லை போராட்ட களத்தில் கொதித்தெழுவாரா ? என்கின்றனர் கேள்விக்கனைகளால் கரூர் மக்கள்.

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மண்டை மேல உள்ள கொண்டையை மறந்தது போல, சுதந்திரத்திற்கு வித்த நம் அண்ணல் காந்தியடிகளின் சிலையை கழுவாமலும், அவரது திருவுருவச்சிலைகளுக்கும், அவரை மையப்படுத்திய பூங்காவினை இருட்டாக்கி, அருகில் உள்ள கிளப்புகள் வர்ண விளக்குகள், அதன் அருகே உள்ள மாநகராட்சி அலுவகத்திற்கு வர்ண விளக்குகள் என்றால் இது எப்படி உள்ளது என்றால் சுதந்திர கதாநாயகனுக்கு இருட்டை காண்பித்து வர்ண விளக்குகள் கொண்டு அரசியல் செய்யும் அரசியல் வியாபாரிகள் மீது தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோரின் கூட்டு நடவடிக்கை எடுப்பதோடு, கடந்த சில தினங்களுக்கு முன்னர் போதைப்பொருள் விவகாரத்தில் சாப்ட் முதலமைச்சர் என்று கருத வேண்டாம் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று அறிவித்த நிலையில், கரூரை மையமாக வைத்து காந்தி சிலை விவகாரத்தில் இருந்து சர்வாதிகாரியாக மு.க.ஸ்டாலின் மாற வேண்டும்.

சுதந்திர தின 75 ஆம் ஆண்டு விழாவில் காந்தி சிலைகளை கொண்டு அரசியலா ? இந்த செயலுக்கு துணை போவது அமைச்சராக இருந்தால் அவரது பதவி, மாவட்ட ஆட்சியராக இருந்தால் அவரது பதவி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கின்றனர் நடுநிலையாளர்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories