December 8, 2025, 1:00 AM
23.5 C
Chennai

பாஜக மொழி மூலம் நாட்டில் பிளவை ஏற்படுத்த நினைக்கிறது-ராகுல்காந்தி..

500x300 1758350 rahul yatra3 - 2025

மூன்று கடலும் சங்கமிக்கும் இடத்தில் இந்தியாவின் ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது
என கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் ஒற்றுமை பயணத் தொடக்க விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசினார். 

அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாட்டிற்கு வருவது மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கிறது. 3 கடலும் சங்கமிக்கும் இடத்தில் இந்தியாவின் ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது மிகவும் முக்கியமான தருணம்.

தேசியக் கொடி வெறும் துணி மட்டுமல்ல. தேசியக் கொடி அதைவிட மேலானது. தேசியக் கொடி நமக்கு எளிதாக கிடைக்கவில்லை. இந்திய மக்களின் போராட்டத்தால் மீட்டெடுக்கப்பட்டதுதான் தேசியக் கொடி.இந்தியா மொழிகளை தேசியக் கொடி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. கொடி தனி நபருக்கானது அல்ல. இது நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. 

ஒரு மாநிலத்திற்கோ, மதத்திற்கோ, மொழிக்கோ, சாதிக்கோ, சொந்தமானதல்ல தேசியக் கொடி. நாட்டின் அனைத்து குடிமக்களுக்குமானது. ஒவ்வொரு இந்தியரின் அடையாளமாகவும் தேசியக் கொடி உள்ளது. 
ஒவ்வொரு குடிமக்களுக்கான உரிமையையும் தேசியக் கொடி பாதுகாக்கிறது. தனிநபர்களின் உரிமையை, கலாசாரத்தை, பண்பாட்டை பாதுகாக்கிறது. 

தற்போது அந்த கொடி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. இந்தியா என்கிற தத்துவம் கொடியை பாதுகாக்க வேண்டும். இந்தியா ஜனநாயகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. பாஜக, ஆர்.எஸ்.எஸ். மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் இந்தியர்களை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. இந்திய மக்கள் ஒருநாளும் பாஜகவிற்கு அச்சப்படமாட்டார்கள். 

பாஜக மொழியின் மூலம் நாட்டில் பிளவை ஏற்படுத்தலாம் என நினைக்கிறது. தொலைக்காட்சியில் வேலையில்லா திண்டாட்டத்தைப் பற்றி பேசமாட்டார்கள். ஆனால் அதில் பிரதமர் முகத்தை மட்டும் தான் ஒளிபரப்புவார்கள் என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசியதாவது நாடு இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்துடன், நாடு பேரழிவை நோக்கிச் செல்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை பாஜக அரசு திட்டமிட்டு தாக்கியுள்ளது.

சில பெரிய வணிகங்கள் இன்று முழு நாட்டையும் கட்டுப்படுத்துகின்றன. இதற்கு முன்பு இந்தியாவை கிழக்கிந்திய கம்பெனி கட்டுப்படுத்தியது. இன்று இந்தியா முழுவதையும் கட்டுப்படுத்துவதற்கு 3-4 பெரிய நிறுவனங்கள் உள்ளன. இவ்வாறு ராகுல் பேசினார்.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை, 3,500 கி.மீ தூரம் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் பாத யாத்திரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளனர். 150 நாட்கள் நடைபெறும் இந்த பாத யாத்திரையின்போது, நாடு முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்ட பல தரப்பட்ட மக்களை சந்திக்கும் வகையில் பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories