திமுகவின் பினாமி ஓபிஎஸ்- எடப்பாடி பழனிசாமி காட்டம்

eps admk 08 09 22 01 1068x519 1 - 2026

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது; அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் சோதனை ஏற்படும் போதெல்லாம் சாதனை படைத்துள்ளது என எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் கூறினார்.

கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்றம் உத்தரவின்படி அந்த ‘சீல்’ அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை அலுவலகத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தி்ல எங்கள் சாமி எடப்பாடி பழனிச்சாமி என முகப்பு பேனர் வைத்து, அலுவலகம் வரவுள்ள கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கட்சியினர் திரண்டனர்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லத்திலிருந்தே வரவேற்பு அளிக்கப்படது. 72 நாட்களுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி.எடப்பாடி பழனிசாமிக்கு அவரது ஆதரவாளர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க அலுவலகத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட அறைகளையும் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.புதிதாக நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசும் போது அ.தி.மு.க.வை சிதைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு நமது வெற்றி ஒரு பாடமாக இருக்கும்.

பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் வெற்றி பெற்றிருக்கிறோம் என கூறினார். பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:- நீதிமன்ற உத்தரவுபடி அதிமுக தலைமை அலுவலகம் எங்கள் தரப்புக்கு தரப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் கட்சியின் நலன் கருதி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அத்துமீறி கட்சி அலுவலகத்தில் சிலர் நுழைந்தனர். அ.தி.மு.க. அலுவலகத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தோம்.

வேண்டுமென்றே திட்டமிட்டு கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது புகார் அளித்தோம், தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.நீதிமன்றத்தை நாடினோம் நீதிமன்றமும் உத்தரவிட்டது. நேற்று தான் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

கீழ்தரமான வேலையில் ஈடுபட்டவர் ஓபிஎஸ், பச்சோந்தியை விட அதிகமாக நிறம் மாறக்கூடியவர். நினைத்து நினைத்து ஒவ்வொன்றாய் பேசக்கூடியவர், கட்சிக்கும் விஸ்வாசம் இல்லாதவர்.1989 தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் பணியாற்றியவர் ஓபிஎஸ். திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது; அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் சோதனை ஏற்படும் போதெல்லாம் சாதனை படைத்துள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும். அ.தி.மு.க.வில் பிளவு என்பது கிடையாது. சிலர் துரோகம் செய்தார்கள் அவர்கள் மீது பொதுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நீக்கப்பட்டார்கள். ஓ.பி.எஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதிமுக தொண்டர்கள் எப்படி மன்னிப்பார்கள். அதிமுகவுக்கு எதிராக துரோகம் செய்து கடசி அலுவலகத்திற்குள் கொள்ளைக்கூட்ட தலைவன் போல வந்து சூறையாடி திமுகவின் பினாமியாக செயல்படுபவரை தொண்டர்கள் எப்படி ஏற்பார்கள். அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைந்து மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்போம். ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை கூட தி.மு.க.வால் அசைக்க முடியவில்லை, அ.தி.மு.க.வை யாரும் குறைச்சு மதிப்பிட முடியாது. ஆர்.எஸ்.பாரதியை தேர்தலில் நிக்க சொல்லுங்கள் பார்க்கலாம், தி.மு.க.வை பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு, இல்லாத போது ஒரு பேச்சு. அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. 96 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுடன் உள்ளனர் என கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories