தமிழகத்தில் எல்லை மீறி செல்லும் கனிமவள கொள்ளை-அண்ணாமலை..

images 69 1 - 2026

தமிழகத்தில் எல்லை மீறி போய் கொண்டிருக்கிறது கனிமவள கொள்ளை-என அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  • கனிமவள கொள்ளையால் இரவும் பகலும் பலமான வெடிச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன.
  • பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜ.க.வினர் உதவி செய்து வருகிறார்கள்.என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் ஆற்று மணல், கடல் மணல், மலைகள், பாறைகள் என்று கனிமவளம் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் களவு போகிறது. அண்டை மாநிலங்களுக்கு மிக அதிக அளவில் கனிமவளம் கடத்தப்படுகிறது. கனிமவள கொள்ளை எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது.

இதற்கு சாட்சியாக கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கொரட்டகிரியைச் சேர்ந்த மக்கள் தங்கள் கிராமத்தை விட்டே வெளியேறி, கனிமவள கொள்ளை லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். லாரிகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட போலீசார், பொதுமக்களை தாக்கியுள்ளனர்.

அனுமதி பெறாமல் தனியார் சிலர் கொரட்டகிரி கிராமத்துக்கு அருகிலுள்ள மலையை உடைத்து அந்த குவாரியிலிருந்து ஜல்லி, எம்-சாண்ட் போன்றவற்றை கனரக லாரிகள் மூலம் கொண்டு செல்வதால் சாலைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துவிட்டது, விவசாயம் செய்ய முடியவில்லை என்று கூறி அந்த கிராம மக்கள் போராட்டம் நடத்த நெடுஞ்சாலைக்கு வந்துள்ளனர். போலீசார் சமாதானப்படுத்தியதில் மக்கள் திரும்பச் சென்றுள்ளனர்.

ஆனாலும் ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கனிமவள கொள்ளை நிற்கவில்லை. இரவும் பகலும் பலமான வெடிச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் வீடுகள் சேதம் அடைந்திருக்கின்றன. இந்த சூழலில் கிராம மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளை காலி செய்து வெளியேறி, அருகேயுள்ள வனப்பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, உதவிகளை பா.ஜ.க.வினர் செய்து வருகிறார்கள்.

அண்டை மாநிலங்கள் எல்லாம் தங்கள் ஆறுகளையும், மலைகளையும், கனிம வளத்தையும் கண்ணும் கருத்துமாக காப்பாற்றிக் கொண்டிருக்கும்போது சுற்றுச்சூழல் பற்றிய சிந்தனை இல்லாமல் தமிழகத்தில் கனிமவள கொள்ளை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை பா.ஜ.க. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

எனவே தமிழக அரசு கனிம வளக்கொள்ளையை தடுத்து நிறுத்திடவும், கொரட்டகிரி மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு மீண்டும் திரும்பும் வண்ணமும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஓரிரு நாட்களில் நல்ல முடிவு எட்டப்படாவிட்டால் பா.ஜ.க.வின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories