ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன.
அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posts by Sakthi Paramasivan.k:
- தீபாவளி சிறப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சேர்த்தி சேவை!
- சித்திரை ஆட்டத் திருநாள் பூஜை; சபரிமலை பக்தர்களுக்கு ஒரு ‘நல்ல’ செய்தி!
- ஆரியன்காவு கோயிலில் முக்கிய திருப்பணி!
- குருவாயூர் ஏகாதசி: லட்ச தீப ஒளியில் ஜொலித்த ஸ்ரீ கிருஷ்ணன் கோயில்!
- ஐப்பசி பூரம்; ஆண்டாள் அவதரித்த நந்தவனத்தில் சிறப்பு ஆராதனை!



