
இரட்டை இலை சின்னம் கிடைக்குமா?பாஜக ஆதரவு தருமா ?இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு தொகுதியில் தீவிர ஓட்டுவேட்டையில் இறங்கி விட்டார்.ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர்.
வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.சின்னம் பெயர் தெரியாத நிலையிலும் தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்ற அனுபவத்தை வைத்து மக்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருகிறார் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு
அவர் ஓட்டு கேட்டு பேசியதாவது ,
மக்களே என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.என்னை எளிதில் அணுக முடியும். என் வீட்டுக்கு வாட்ச்மேன் கிடையாது’.
அதிமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விரிவாக்கம், அரசு மருத்துவமனை மேம்பாலம், அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்வு, கனி ஜவுளிச் சந்தைக்கு புதிய வணிக வளாகம் என பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.
என்னை எளிதில் யாரும் அணுக முடியும். எனது வீட்டில் காவலுக்காக வாட்ச்மேனோ, நாயோ இல்லை. 24 மணி நேரமும் என்னை தொடர்பு கொள்ள முடியும். இந்தத் தொகுதி மக்களில் பெரும்பாலானவர்கள் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு, உரிமையாய் பழகி வருகிறேன். இந்தத் தேர்தலில் என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள் என்றார்.