
பாஜக விடம் எச்சரிக்கையாக இருக்கிறோம் என அதிமுக இபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைப்பிற்கு வாய்ப்பு இல்லை; பாஜகவிடம் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம்; வட மாநிலங்களில் பாஜக எப்படி செயல்பட்டது என்பது எங்களுக்கு தெரியும்.
சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பின்படி இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் பக்கம்தான் உள்ளது: அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் சட்டவிதிகளை பின்பற்றாமல் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை கை காட்டுவதை ஏற்க முடியாது.94.5 சத பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளதால் இரட்டை இலை இபிஎஸ்-க்கே கிடைக்கும். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கு கட்சியே இல்லை. ஒ. பன்னீர்செல்வம் ஒரு செல்லாக்காசாகிவிட்டார்.
உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. வடநாட்டில் பாஜக என்னென்ன செய்தது என்பதை அறிந்துள்ளோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்வி பொருளற்றது. உள்ளாட்சித் தேர்தலிலேயே பா.ஜ.க.வுடனான கூட்டணி முடிந்துவிட்டது.பா.ஜ.க. தனித்துத்தான் போட்டியிட்டது.இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என முன்னாள் அதிமுக அமைச்சரும் மூத்த தலைவருமான பொன்னையன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் .