ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி பெறுமா அதிமுக..

images 56 1 - 2026

பெரும் போராட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் மிகச் சரியான வேட்பாளரை நிறுத்தியாச்சு .வாக்காளர் மத்தியில் பிரபலமான இரட்டை இலை சின்னத்தை சரியான வழியில் முயற்சித்து பெற்றாச்சு .அடுத்த வேலையும் இன்று தொடங்கி விட்டார் கில்லாடி இபிஎஸ்.

இடைத்தேர்தல் என்றால் அசுரபலத்துடன் களத்தில் இறங்கி ஆளுங்கட்சி தான் வெற்றி பெறவேண்டுமா? ஏன் தொகுதியில் பலமுறை வெற்றி பெற்ற நாம் எதிர்கட்சியாக அசுர பலத்துடன் களத்தில் இறங்கி வெற்றி பெறக்கூடாது ?அதிமுக தேர்தல் பணிக்குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி இன்று இதற்கான ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 107 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் ஆலோசனை கூட்டம் இதுவாகும்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. எப்போதும் கடைசி கட்டத்தில் வேட்பாளரை அறிவிக்கும் காங்கிரஸ் இந்த இடைத்தேர்தலில் முதலாவதாக வேட்பாளரை அறிவித்து ஈவிகேஎஸ்.இளங்கோவனை அறிவித்தது.முதலில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில் கே.பி.ராமலிங்கத்தை வேட்பாளராக்க முடிவு செய்தது.அவரும் சரி அதிமுக முக்கிய பிரபலங்கள் தொகுதியில் நிற்க முன்வரவில்லை.ஒரு கட்டத்தில் எரிச்சலை வெளிப்படுத்திய இபிஎஸ் பதவிக்கு முன்வரிசையில் வருகின்ற நீங்கள் பிரச்சினை வரும் போது பக்கபலமாகக்கூட இருப்பதில்லை என கோபப்பட்டாராம்.கடைசியில் அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை களத்தில் இறக்கி விட்டார்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாவும் எதிர்த்து நிக்க எதிரணி வரவில்லையே என காங்கிரஸ் தலைவர் அழகிரி உட்பட பிரபலங்கள் கூறிவந்த நிலையில் எதிரணி நிறுத்திய வேட்பாளரை பார்த்து கொஞ்சம் தயங்கி தான் அடுத்த கட்ட வேலையை துவக்கினர் ஆளுங்கட்சி கூட்டணி. அடுத்தாக இரட்டை இலை சின்னத்தையம் வாங்கி எதிர்த்த ஓபிஎஸ் வேட்பாளரும் வாபஸ் பெற்று குக்கர் சின்னம் கிடைக்க வில்லை என காரணம் கூறி அமமுக வும் வேட்பாளரை திரும்ப பெற்றது.

இவை எல்லாம் இபிஎஸ்க்கு சாதகமான பலன்களாக அமைந்த நிலையில் இப்போது தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அதிமுக தேர்தல் பணிக்குழுவினருடன் ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 107 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் ஆலோசனை கூட்டத்தில் இடைத்தேர்தல் வெற்றி நமக்கான தாக இருக்கவேண்டும்.அதற்கு எல்லோரும் ஓய்வில்லாமல் உழைக்கவும் செய்யனும் .செலவை பத்தி கவலை வேண்டாம் என தேர்தல் பணிக்குழு விடம் இபிஎஸ் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இளங்கோவனுக்கு மகன் இறந்த அனுதாப வாக்குகள், ஆளுங்கட்சி மற்றும் அமைச்சர்கள் ஒத்துழைப்பு என எல்லாம் இருந்தும் எதிரணி மிக வலுவான தாக உள்ளதால் காங்கிரஸ் தொகுதியை மீண்டும் தக்கவைக்க கடும் பிரச்சாரம் செய்து மக்கள் வாக்குகளை பெறவேண்டும்.இடைத்தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்கு எப்போதும் சாதகமான தில்லை .என கடந்த கால இடைத்தேர்தல் முடிவுகளை வைத்து அதிமுக கடுமையான படை சூழ களத்தில் இறங்கி வேலை செய்கிறது.

காங்கிரஸ்க்கு வேலை செய்யும் அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில் பாலாஜி,கேகேஎஸ்எஸ்ஆர்,சேகர் பாபு என பலரும் அதிமுக பட்டறையில் இருந்து சென்றவர்கள்.இவர்களுக்கு பிரச்சார யுக்திகளை கற்றுக்கொடுத்த செங்கோட்டையன் இபிஎஸ் போன்றவர்கள் இருப்பதை வைத்து அதிமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை போராடினால் வெற்றி நிச்சயம் என்ற நோக்கில் களத்தில் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories